சஹ்ரான் ஹாசீமின் 63 சகாக்கள் கைது

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீமின் 63 சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தௌஹீத் ஜமாத் அமைப்பினால் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடாத்திச் செல்லப்பட்ட முகாம்களில் இவர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் மரபு ரீதியான முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு முரணான விதமான விரிவுரைகளை சஹ்ரான் உபதேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஹ்ரான் ஜிஹாதிய கொள்கைகளை பின்பற்றியதாகவும், ஜிஹாதிய கொள்கைகளை பின்பற்றாத அனைவரையும் கொன்றொழிக்க வேண்டுமென அவர் விரும்பியதாகவும் சஹ்ரானின் சகாக்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதம் குறித்த விரிவுரைகளை சஹ்ரான் வழங்கியுள்ளதுடன், அவரது நெருங்கிய சகாவான மில்ஹான் என்பவரினால் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வவுணதீவு பொலலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலையுடன் தொடர்படைய பிரதான சந்தேக நபராக மில்ஹான் கருதப்படுகின்றார்.

மில்ஹான் என்பவர் பலம்பொருந்திய மத்திய கிழக்கு நாடொன்றில் மறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.