ஆளுநர் அசாத் சாலியின் பதவிக்கு பீலிக்ஸ் பெரேராவை நியமிக்க யோசனை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த யோசனைக்கு சிரேஷ்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேல் மாகாண ஆளுநராக தமிழ் அல்லது முஸ்லிம்களே நியமிக்கப்படுவது வழக்கம். எனவே, அசாத் சாலியை நீக்கி விட்டு சிங்களவரான பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1988ஆம் ஆண்டில் இருந்து மேல் மாகாண ஆளுநர்களாக, சுவாமிநாதன், விக்னராஜா, பத்மநாதன் இராமநாதன், அலவி மௌலானா, கே.சி.லோகேஸ்வரன் ஆகியோர் பதவி வகித்துள்ளனர். எனினும் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் ஹேமகுமார நாணக்காரவும் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரையடுத்தே, அசாத் சாலி மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மேன்மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.