தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட குழப்பம்! உள்நுழைந்த மர்மகும்பல்! அதிரடி படையினர் குவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தென்னிலங்கையில் இன்று அதிகாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெலிகம, கொட்டாகொட பகுதிக்குள் மர்ம கும்பல் ஒன்று நுழைய முற்பட்டமையினால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்து அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதன் காரணமாக மர்ம கும்பலின் முயற்சி பலனளிக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்து பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்தப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெலிகம, கொட்டாகொட பகுதியில் அமைதியான நிலைமை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.