ரிசாத், ஹிஸ்புல்லா, அசாத் தொடர்பில் பிரதிநிதிகள் ஊடாக ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டுள்ள கடும் அழுத்தம் காரணமாக மூன்று நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் (nethnews.lk) ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று முற்பகல் 12.00 மணிக்கு முன்னர் ஆளுநர் அசாத் சாலியை பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ரிஷாட் பதியூதின் தனது அமைச்சர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி விசேட பிரதிநிதி ஊடாக அறிவித்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதியிடம் கடிதம் கையளித்துள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்திருந்தார்.

எனினும் தான் இன்னும் பதவி விலகும் முடிவினை எடுக்கவில்லை என்றும் அது தொடர்பில் தற்போது ஆலோசித்து வருவதாக ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை மேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டிருந்தார்.