சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்! ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் மெல்கம் ரஞ்சித்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கண்டியில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அத்துரலியே ரத்தன தேரரை, கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தித்தார்.

தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரத்தன தேரரின் உடலில் நீர்த்தன்மை அற்றுப்போயுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கண்டி தலாதா மாளிகைக்கு முன்னால் சென்ற பேராயர் தேரரின் நலம் விசாரித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

ரத்ன தேரர் நியாயமான கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். அவருக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உண்மையாக உதவிய அரசியல்வாதிகள் யார் என இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்கள் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டும். கொல்லப்பட்ட மக்களுக்காக தேரர் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். அவர் விடயங்கள் அறிந்தே ஆர்ப்பாட்டம் செய்கின்றார். அவரது கோரிக்கைகள் நியாயமானவையாகும்.

இது மக்களின் நாடு. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மீண்டும் அவ்வாறான ஒன்று நடைபெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.