பரபரப்பாகும் கண்டி! ஒன்று திரண்டுள்ள பெருமளவு பிக்குமார்! கடும் அச்சத்தில் மக்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் நான்காவது நாளாக நடத்தப்படும் உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பிக்குமார் இணைந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குமாருடன் பாரிய அளவிலான மக்களும் கலந்துள்ளனர்.

பெரும் திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளமையினால் அந்தப் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் இதற்கான தீர்வு வழங்கப்படா விட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஞானசார தேரர் நேற்று எச்சரித்திருந்தார்.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் எதுவும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்ற அச்ச நிலையில் மக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.