ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்ற புலனாய்வு பிரிவு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதற்கு அடுத்த நாள் பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு வந்த சவுதி நாட்டவர்களை ஹிஸ்புல்லாஹா சந்தித்த காணொளி ஒன்று வெளியாகி இருந்தது.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த சவுதி நாட்டவர்கள் மூவர் மற்றும் மேலும் இருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பொலிஸார் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் குறித்த ஹோட்டலுக்கு சென்றுள்ார்.

இரவு 9.12 மணியளவில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் சென்ற அவர், சுமார் ஒரு மணித்தியாலமாக சவுதி நாட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சவுதி நாட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட செயற்பாடு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்தமை தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.