யுத்த காலத்தில் எம்முடன் இருந்த முஸ்லிம்களுக்காக இந்த நிலை? மனவேதனையில் ரணில்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதற்தடவையாக முஸ்லிம்களற்ற அமைச்சரவை காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.

எமது அரசாங்கத்திலிருந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

சுதந்திரத்தின் பின்னர் முதற்தடவையாக முஸ்லிம்கள் அற்ற அமைச்சரவை காணப்படுகின்றது.

இது தொடர்பில் ஒரு சிலர் மகிழ்ச்சியடைய முடியும். எனினும், நாட்டிற்கு அது சிறந்ததல்ல. யுத்த காலத்தில் முஸ்லிம்கள் முழுமையாக எம்முடன் இருந்தனர். நான் இது குறித்து கவலையடைந்தேன்.

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒருமாத காலத்தில் முற்றாக ஒழித்துள்ளோம். இதுவொரு உலக சாதனையாகும். ஐ.எஸ் பயங்கரவாதிகளை முற்றாக ஒழிப்பதில் சில நாடுகளே வெற்றி கண்டுள்ளன என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Latest Offers