ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரிக்கும் ரணில்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனவாத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் ஹிஸ்புல்லா முஸ்லிம் மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாதவை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் என்ற அடையாளத்துடனே நாட்டு மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவில் சமூக பிரதிநிதிகளுடனான இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.