மோடியின் விஜயத்தின் போது புதிய வியூகம்!! கைகோர்க்கும் இலங்கை - இந்தியா- மாலைத்தீவு

Report Print Murali Murali in பாதுகாப்பு

பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாலைத்தீவு, இலங்கை மற்றும் இந்தியா இணைத்து பிராந்திய பாதுகாப்புக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து விவாதித்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து தனது முகப்புத்த பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஆதரவு தெரிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கை மீதான நம்பிக்கையை மோடியின் பயணம் வலுப்படுத்தும். இலங்கைக்கு ஏராளமான மக்கள் வருகை தருவதை ஊக்கப்படுத்தும்.

இந்நிலையில், இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக மோடியுடன் உரையாடினேன். மாலத்தீவு, இலங்கை மற்றும் இந்தியா இணைத்து பிராந்திய பாதுகாப்புக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து விவாதித்தோம்.

இலங்கையில் இந்தியா தொடர்பான அனைத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்படும் என உறுதி அளித்தேன். இலங்கை இராணுவத்துடன் இந்தியா நெருக்கமான உறவைப் பேணி, தீவிரவாத செயல்களை முறியடிக்கும் பயிற்சிகளை வழங்க வேண்டும்.

இதேவேளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களை பிராந்திய நிலையங்களாக மாற்றம் செய்வது குறித்து விவாதித்தோம்.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.