திருகோணமலை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்கள் கைது

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை இன்று(12) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை பிராந்திய கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோர் கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் எனவும் இவர்கள் 27, 29, 48 மற்றும் 57 வயதுடையோர் எனவும் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து மீன் பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கடற்றொழில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, எஞ்சின் ஒன்று, சட்டவிரோத மீன் பிடி வலைகள் என்பவற்றையும் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களான மீனவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.