விமானப் படையினருக்கு ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

விமானப்படைக்கு புதிதாக போர் விமானங்களையும் பயிற்சி விமானங்களையும் பெற்றுத் தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

விமானப்படைத் தளபதியாக அண்மையில் எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்றார். இந்நிலையில் நேற்றுக் காலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருந்தார்.

இக்கலந்துரையாடலின் போது, விமானப்படைக்குத் தேவையான போர் விமானங்களையும் பயிற்சி விமானங்களையும் பெற்றுத் தர தயாராக இருப்பதாக பிரதமர் நம்பிக்கையளித்துள்ளார்.

இதேவேளை, விமானப்படைக்கு அரசாங்கம் உலங்கு வானூர்திகளையும் கொள்வனவு செய்ய தீர்மானத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் பாதுகாப்பு இணைப்பாளர் மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers