தற்கொலை குண்டுதாரியின் தொழிற்சாலையில் கொள்ளையிட்ட நபர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிக்கு சொந்தமான செம்பு தொழிற்சாலையில் கொள்ளையிட்ட ஒருவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செம்பு தொழிற்சாலை பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பூட்டைஉடைத்து தொழிற்சாலைக்கு புகுந்து கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாகஹாமுல்ல வீதி வெல்லம்பிட்டிய என்ற முகவரியை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சேலாக துமிந்த சம்பத் என்ற இந்த சந்தேக நபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers