தமிழ்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சஹ்ரான் கும்பல்! இந்திய புலனாய்வு பிரிவு தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் தேசிய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 14 கைத்தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள்,10 பென் டிரைவ், 3 மடிக்கணனி, 6 மெமரி கார்டு, 4 ஹார்டு டிஸ்க் என்பன மீட்கப்பட்டுள்ளன.

உக்கடம் பகுதியை சேர்ந்த முஹமது அசாருதின் தலைமையிலான குழுவினர் தேசிய புலனாய்வு அமைப்பினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சஹ்ரானை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொள்ளும் முஹமது அசாருதின், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தவும் இந்த கும்பல் திட்டமிட்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹசிமின் பிரசார பேச்சால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஈர்க்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் கோவை மற்றும் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்பாட்டை தேசிய புலனாய்வு பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Latest Offers