அடிப்படைவாதம் குறித்த உண்மையை அம்பலப்படுத்துவேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்கு விரும்புவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

அமைப்பின் பொதுசெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் தெரிவுக் குழுவில் முன்னிலையில் ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமக்கான அனுமதியை வழங்குமாறு பொதுபல சேனாவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தும், இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படக்கூடும் என்றும் முன்னரே அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய சீடிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பல்வேறு தகவல்கள் தங்கள் எங்களிடம் உள்ளன. அவை விசாரணைகளுக்கு பெறுமதியானவை எனவும் பொதுபல சேனா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.