அசாத் சாலிக்கு இவ்வளவு பணம் கிடைத்தது எப்படி?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் மற்றும் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகிய இருவருக்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உருமய மற்றும் மேலும் ஒரு அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரான சட்டத்தரணி உதய கம்மன்பில, சிங்கள தேசிய அமைப்பின் டேன் பிரியசாத் ஆகியோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இலங்கையை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரும், ரிஷாட் பதியூதின், அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

அசாத் சாலிக்கு சொந்தமான குடும்ப வியாபாரத்தில் அரச பணம் பயன்படுத்தியுள்ளதாகவும், அவருக்கு அந்தளவு பணம் எப்படி கிடைத்து என்பது தொடர்பிலும் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.