இலங்கையில் அரபு கல்லூரியை ஆரம்பிக்க தயாரான கிங்ஸ்பெரி தற்கொலை குண்டுதாரி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலினுள் குண்டுவெடிக்க செய்த மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் எனப்படும் பயங்கரவாதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பயங்கரவாதி இறுதியாக தங்கியிருந்த கொலன்னாவ வீட்டில் இருந்து அரபு பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள், கோட்டை நீதிமன்றத்தில் நேற்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அரபு பாடசாலை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்களில் செயலாளராக, இமுரா லெப்பே மொஹமட் சாஜித் என்பவரினால் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மொஹமட் அசாம் உட்பட சந்தேக நபர் எடேமுரல்ல மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு வீட்டில் தங்கியிருந்ததாகவும் நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பயற்சி முகாமில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாகவும், குற்ற விசாரணை அதிகாரிகள், நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இமுரா லெப்பேயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மொஹமட் அசாம் என்ற குண்டுதாரி 2014ஆம் ஆண்டு தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளதென குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கூறுயுள்ளனர்.

Latest Offers