விசாரணைக்கு அழைக்கப்படாத முன்னாள் காவல்துறைமா அதிபர்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோணை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்படவில்லை என அந்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், அது தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், அக்குழு முன்னிலையில் இதுவரை பலர் தங்களது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோணை இவ்விசாரணைக்காக அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மேலதிகமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவும் இன்றைய தினம் குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்படவில்லை நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹஸ்புல்லாஹ், முன்னாள் காவல்துறைமா அதிபர் இலங்ககோண், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியும் சாட்சி வழங்குவதற்காக இன்றைய தினம் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவருக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இருவரும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers