தென்னிலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு தயாராக இருந்த ஐ.எஸ் தீவிரவாதி கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

காலியில் கைது செய்யப்பட்டவர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும், இஸ்லாமிய தேசம் ஒன்றிற்காக தனது உயிரை தியாகம் செய்வதற்கு சஹ்ரான் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் காலி தலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பியகம பிரதேசத்தின் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக தொழில் செய்துள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக மாணவர்களுக்கு ஆங்கில மேலதிக வகுப்பு நடத்தியுள்ளார்.

இந்தத் தகவல்களை விசாரணை மேற்கொள்ளும் காலி குற்ற விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரி உதய செனவிரத்ன வெளியிட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவியின் மல்வானை வீட்டில் இடம்பெற்ற விருந்தில் சஹ்ரான் மற்றும் தெஹிவளை குண்டுத்தாரி ஜமித் உட்பட குழுவினர் கலந்து கொண்டதன் பின்னர் பியகம மண்டபம் ஒன்றில் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அங்கு ஒரு நாள் பயிற்சி பெற்றதன் பின்னர் மாத்தளையில் இரண்டு நாட்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர். அதில் 25 பேர் கலந்து கொண்டுள்ளனர். சந்தேக நபர் இஸ்லாமிய தேசத்திற்காக தனது உயிரை தியாகம் செய்ய சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரியந்துள்ளது.

குறித்த நபரை கைது செய்யும் போது அவரிடம் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் 1108 சிடிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers