புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா மேல் நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதியன்று முல்லைத்தீவு - புதுகுடியிருப்பில் தமது காவலில் இருந்த 8 இராணுவ அதிகாரிகள், 26 பாதுகாப்பு படை உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை 2010ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வந்த நிலையில் தற்போதே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.