தெரிவுக்குழுவில் மறக்கப்பட்ட முக்கிய விடயம்! தப்பித்துக் கொண்ட ஹிஸ்புல்லா

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் நாடாளுமன்றத்தின் விசேட தெரிவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முக்கிய விடயம் தவற விடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவு குழு, கடந்த புதன்கிழமை ஹிஸ்புல்லாஹ்விடம் விசாரணை மேற்கொண்டிருந்தது.

இதன்போது ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அந்த தாக்குதல்களின் பிரதான நபரான பயங்கரவாதி சஹ்ரான் என்பருடனான தொடர்பு மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்விடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், பாசிக்குடா ஹோட்டலில் முக்கிய நபர்களை ஹிஸ்புல்லா சந்தித்திருந்தார். இது தொடர்பில் வெளியான சிசிரிவி காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாடாளுமன்ற விசேட தெரிவு குழு தவறியுள்ளது.

இது தொடர்பில் விசேட தெரிவு குழு உறுப்பினராக அன்ஷீ மாரசிங்கவிடம் வினவிய போது, அந்த சிசிடீவி காணொளி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், பாசிக்குடா பிரதேச ஹோட்டலில் சவுதி அரேபிய நாட்டவர், சந்தித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, அவர்கள் சவுதி அரேபியாவை சேர்ந்த சுற்றுலா முதலீட்டாளர்கள் என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.