நாட்டின் பாதுகாப்பு ஆபத்தான நிலையில்..! மீண்டும் மக்களை எச்சரிக்கும் பொன்சேகா

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டில் இன்னும் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தாம் ஏற்கனவே எச்சரிக்கை விட்ட போதிலும், இதுவரையில் யாரும் அவதானம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டத்திற்கு இடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கு 99 வீத பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவில் குறிப்பிட்டிருந்தார் என்பதனை பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஒன்று இல்லாத நபர்களினால் அவ்வாறான கருத்து வெளியிட்டுள்ளதாகவும், தீவிரவாதத்தை அவ்வளவு இலகுவாக இல்லாமல் செய்து விட முடியாதென அவர் அவர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் கதைகளை கேட்டு ஏமாறால் சுயநினைவுடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.