இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மிஹிந்தலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசியல்வாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நகர சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டு பாரிய காயத்தை ஏற்படுத்திய மிஹிந்தலை நகர சபை உறுப்பினர் சேர்ந்த ரணசிங்க ஆராச்சிலாகே நிபுன மதுசங்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் உறுப்பினரால் தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இளைஞர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உறுப்பினர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் 20 - 25 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.