இலங்கை வந்துள்ள இந்திய முப்படைக் குழுவினர் மீண்டும் நாடு திரும்புகின்றனர்

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

இலங்கை வந்துள்ள இந்திய முப்படைக் குழுவினர் இன்றைய தினம் மீண்டும் இந்தியா பயணமாகவுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி இந்திய முப்படையினர் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் மொத்தமாக 159 பேர் இலங்கை வந்திருந்தனர்.

குறித்த முப்படை குழுவானது இலங்கை இராணுவத் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் முப்படை குழுவானது இலங்கையில் முக்கிய இடங்களான ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் யானைகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தது.

இந்த நிலையில் இந்திய முப்படைக் குழுவானது மீண்டும் இன்று இந்திய செல்லவுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.