கொழும்பில் உச்சகட்ட அரசியல் மோதல்! தீர்மானமிக்க முடிவு இன்று வெளியாகும்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் விசேட தெரிவு குழுவிற்கு இன்றைய தினம் தீர்மானமிக்க நாள் என உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தெரிவு குழுவின் நடவடிக்கையை தொடர்ந்து நடத்தி செல்வது தொடர்பில் அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி உட்பட தெரிவு குழு உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

ஆரம்ப விசாரணையாக தற்போது சிலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் பணியிலுள்ள எந்தவொரு அதிகாரியும் தெரிவு குழுவுக்கு அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அந்த அனைத்து அதிகாரிகளினதும் பொறுப்பினை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தார்.

அந்த உத்தரவை அடுத்து இந்த தெரிவு குழுவை தொடர்ந்து நடத்தி செல்வது பாரிய நெருக்காடியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இறுதி அறிக்கை தயாரிக்காமல் ஆரம்ப விசாரணை நடவடிக்கைகளுடன், வழக்குகள் நிறைவடையும் வரை இந்த தெரி குழுவின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் இந்த தெரிவு குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.