கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தை தகர்க்கப் போவதாக மிரட்டிய மர்மநபர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேவாலய நிர்வாக அதிகாரியான அருட்தந்தைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபர் இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த ஒவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 நிமிடத்தில் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி தகர்த்தி விடுவதாக குறித்த நபர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தேவாயல நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அச்சறுத்தல் விடுத்த நபரின் தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

தற்போது கொச்சிக்கடை பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.