மோப்ப நாயுடன் வவுனியாவில் களத்திலிறங்கிய பொலிஸார்

Report Print Theesan in பாதுகாப்பு

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியா - செக்கட்டிப்புலவு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டட திறப்பு விழாவில் ஆளுநர் சுரேன் ராகவன் இன்றைய தினம் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையிலேயே பாடசாலை வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest Offers