மைத்திரியின் அறிவிப்பை மீறி தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்படும் தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல்கள் சம்பந்தமான விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நாளைய தினம் ஆஜராகுமாறு அரச புலனாய்வு சேவையின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநகல் மூலம் தெரிவுக்குழு இதனை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜர்ப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில், தெரிவுக்குழு தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியை அழைத்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஏற்கனவே நடந்த விசாரணைகளில் தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியின் பெயர் கூறப்பட்டதால், அவரை விசாரணைக்கு தெரிவுக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தகவலை நிலந்த ஜயவர்தனவே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Latest Offers