நீர்கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு! பாகிஸ்தான் பிரஜைகள் தப்பியோட்டம் - பொலிஸார் துப்பாக்கி சூடு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நீர்கொழும்பில் சிறைக்கைதிகள் தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களே தப்பியோடியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் , நைஜீரிய பிரஜை ஒருவரும் தப்பியோடியதாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூன்று கைதிகளும் நீண்ட தூரம் ஓடிச் சென்றமையினால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தப்பிச் சென்ற கைதிகளை பிடித்த பொலிஸார் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பிரஜைகளான இவர்கள் ஏன் தப்பிச் சென்றார்கள், இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You my like this video


Latest Offers