கொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்! வெளிநாட்டு பெண்ணின் துணிச்சல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

விசேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் வெளிநாட்டு பெண்ணொருவரின் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெலயில் பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் முல்லேரியா பொலிஸ் பிரிவின் கல்ஹேன வீதி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு அனுமதியற்ற தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை நடத்தி செல்வது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் மற்றும் அவரது இலங்கை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவரும் 36 வயதான இந்திரா குமார என்பவரும் அவரது மனைவியான 36 வயதான அம்ரும் சத்தோசா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்களின் சாரதி குமார என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

1764 சிம் அட்டைகள், 30 கையடக்க தொலைபேசிகள், 12 சிம் பெட்டிகள், 01 மடிக்கணினி, உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers