வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு வெளிநாட்டு தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு கோடி 60 இலட்சம் பெறுமதியான தங்க நகையை சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் பணம் பரிமாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்களாக 55 மற்றும் 45 வயதுடைய தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 கிலோ 850 கிராம் நிறையுடைய தங்கத்தை தமது உடலிலும் பயண பொதியிலும் மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்க பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் இந்த வருடத்தில் 6 தடவைகள் இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.