பெண்களின் கழிப்பறைக்குள் காணொளி எடுத்த கடற்படை அதிகாரியால் குழப்பம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தென்னிலங்கையில் பெண்களின் கழிப்பறைக்குள் காணொளி எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது வர்த்தக நிலைய பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறையில் இருந்த வேளையில் இதனை அவதானித்துள்ளார். இதன்போது அவர் கூச்சலிட்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் ஏனைய ஊழியர்கள் இணைந்து சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

32 வயதான சந்தேக நபர் பொத்தல பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கடற்படை முகாமில் சேவை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். காலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.