மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு மர்மமான முறையில் கிடைத்த பெருந்தொகை பணம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக சவுதி அரேபிய நிறுவனத்தின் மூலம் இலங்கை வங்கியில் வைப்பிடப்பட்ட 3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடனாக கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அது கடன் பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வங்கியின் அதிகாரி செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பட்டிக்கலோ கம்பஸ் தனியார் நிறுவனத்திற்கு 3 வங்கி கணக்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு 3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாகவும், அது மீண்டும் செல்லுமாறு பதியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளைக்கு 314 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers