அரசியல்வாதிகளால் ஏற்பட்ட பதற்ற நிலைமை - கொந்தளித்த மக்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூர்த்தி நிவாரணம் வழங்கும் நிகழ்வில் நேற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு மாத்திரம் சமூர்த்தி வழங்கப்படுவதாக அங்கு கூடியிருந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சமூர்த்தி நிவாரணம் பெறும் 2500 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கொலொன்னாவ அமைப்பாளர் பீ.அபேகோண் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வு இடம்பெற்ற போது எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நுவன் விதானகமகேவுடன் அந்த இடத்திற்கு வந்த மேலும் சிலர் தங்களுக்கு சமூர்த்தி நிவாரணம் கிடைக்க வேண்டும் என கூறி, மண்டபத்திற்குள் நுழைய முயற்சித்தமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அங்கு நிகழ்வு சபைக்கு வெளியே எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் உதயகாந்த எதிர்ப்பு வெளியிட்டார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை மோதலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது தனக்கு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறி எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.