நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாடு! பல்வேறு தரப்பினரால் அழுத்தம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினராலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த அவரது மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி உதவி செய்வது தொடர்பில் பலர் விமர்சித்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது துப்பாக்கி சூட்டில் உதவி பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமசந்திர உயிரிழந்தார். குறித்த பொலிஸ் அதிகாரி 15 வருடங்களாக நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

தனது பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் உயிரிழந்த நிலையில், இரண்டு மில்லின் ரூபா செலவில், குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டை புனரமைத்துக் கொடுக்க நீதிபதி உதவி வழங்கினார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் மகள் மற்றும் மகனின் கல்வி நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நீதிபதி இளஞ்செழியன் தற்போது வரையில் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் நீதிபதி செய்யும் மனிதாபிமான உதவிக்கு பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்படுவதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.