இராணுவத்தால் கொல்லப்பட்ட தந்தையின் பிரேத அறிக்கையில் வெளியான தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மாத்தறை அக்மீமன பாடசாலை ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த தந்தையின் வயிற்றின் முன் பகுதியில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா முதுகு வழியாக வெளியேறியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் பாடாசாலைக்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்த போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த தந்தையின் வயிற்றில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தமையினால் அதிக இரத்தம் வெளியேறியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக விசேட சட்ட வைத்தியர் ஜானகி வருஷா தெரிவித்துள்ளார்.

நெஞ்சு பகுதிக்கு கீழ் துப்பாக்கி சூடு பட்டமையினால் இரத்தம் அதிக அளவு வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.