நந்திக்கடல் பகுதியில் வெடித்து சிதறிய குண்டு! தற்போது வெளிவந்துள்ள விடயம்

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் நேற்றைய தினம் குண்டு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்த நிலையில் அது தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நந்திக்கடல், பிரம்படி பகுதியில் தனியார் காணி உரிமையாளர் ஒருவர் அவருடைய சொந்த காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பற்றைகளுக்கு தீமூட்டியுள்ளார்.

இதன்போது நிலத்தில் புதைந்து கிடந்த குண்டொன்று தீயின் வெப்பம் காரணமாக வெடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரியவருவதுடன், இது தொடர்பான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெடித்து சிதறிய வெடிகுண்டு தொடர்பில் தடயவியல் பொலிஸ் பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers