புனித தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த சஹ்ரானின் பயங்கரவாத குழு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கண்டி தலதா மாளிகை மீது பயங்கரவாதி சஹ்ரான் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளதாக சஹ்ரானின் சகாக்கள் இந்த தகவலை வெளிப்படுத்தியதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தலதா மாளிகை மற்றும் விகாரைகளுக்கு தாக்குதல் மேற்கொள்வதற்கு 11 குண்டுத்தாரிகள் தயார் நிலையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பாதுகாப்பு வீடு ஒன்று, அரசாங்க புலனாய்வு பிரிவினால் நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.