முல்லைத்தீவில் வெடித்த குண்டு விடுதலைப் புலிகள் புதைத்து வைத்தது?

Report Print Murali Murali in பாதுகாப்பு

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றே இவ்வாறு வெடித்திருக்கக்கூடும் இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியரம் சுமித் அத்தபத்து, “வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.

உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றே இவ்வாறு வெடித்திருக்கக்கூடும். இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு -முள்ளியவளை பகுதியில் நேற்று குண்டு ஒன்று வெடித்திருந்தது. இந்த வெடிப்பின் ஒலி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கேட்டதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers