கிளிநொச்சி பகுதியில் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு!

Report Print Murali Murali in பாதுகாப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முக்கொம்பன் கிராமம் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் பத்து மணி வரை ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இத்திடீர் சுற்றி வளைப்பில் ஈடுப்பட்டிருந்தனர். முக்கொம்பன் கிராமத்தின் பத்து வீட்டுப் பகுதி பிரதேசமே இவ்வாறு சோதனைக்குட்ப்பட்டுள்ளது.

இந்த திடீர் சோதனை நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளும், தேடுதல்களும் தற்போது இல்லாதிருந்த நிலையில் இன்றைய தினம் முக்கொம்பன் கிராமம் படையினரால் சோதனைக்குட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.