கோத்தபாயவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் உட்பட ஏனைய அதிகாரிகளை கைது செய்யும் அதே நேரத்தில், அந்த நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கிய கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியதற்கும் அவசியமான சூழலை ஏற்படுத்தி கொடுத்தவர் கோத்தபாய ராஜபக்ச என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறின்றி நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்வதில் அந்த பிரச்சினை தீர்க்கப்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers