யாழ். மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்! வடக்கு ஆளுநர்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துப் பேசியுள்ளார்.

இன்று (08) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆளுநர் அவர்களை சந்தித்து தனது ஓய்வு குறித்து தெரிவித்துக்கொண்டார்.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் திறமையாக செயற்பட்டமையை இதன்போது பாராட்டிய கௌரவ ஆளுநர், இந்த சேவையை ஆற்றியமைக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.

இதேவேளை மக்களுடன் நட்புறவுடன் சேவையாற்றிய கட்டளைத் தளபதியை யாழ் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்த ஆளுநர், ஓய்வு பெற்றாலும் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பினை நினைவு கூரும் வகையில் ஆளுநர் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு நினைவுப்பரிசினை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers