புத்தர் சிலையால் திடீரென ஏற்பட்ட பதற்ற நிலை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ சந்தியில் நேற்று இரவு பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அந்த இடத்தில் இருந்து நேற்று நள்ளிரவிற்கு முன்னர் அகற்ற வேண்டும் என உத்தரவு கிடைத்ததாக தேரர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக நேற்றிரவு 7 மணியளவில் தேரர்கள் சிலரும் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய அந்த இடத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேரர்கள், அரசியல்வாதிகள் உட்படப 40 பேர் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர்.

தங்கள் உயிரை கொடுத்தேனும் இந்த சிலை அகற்றும் நடவடிக்கையை நிறுத்துவதாக கூறி தேரர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கரவிடம் தேரர்கள் உட்பட குழுவினர் வினவியுள்ளனர்.

எனினும் அவ்வாறான எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை என உறுதியாகிய பின்னர் தேரர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதிக்கு தற்போது தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.