பாதுகாப்பு தொடர்பில் ஜப்பானுடன் உடன்படிக்கை

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பாதுகாப்பு தொடர்பில் ஜப்பானுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்ற ஆசிய கரையோரப் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் தற்போதைக்கு சில நாடுகளுடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக ருவான்டாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சோபா உடன்படிக்கை குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவையின் அனுமதி வேண்டும் எனவும், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ கையொப்பமிட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தரப்பினர் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.