வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவித்தல்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞனிடம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் சீருடையில் சென்ற கும்பல் ஒன்று, முச்சக்கர வண்டியில் பயணித்த வெளிநாட்டவரின் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அத்துருகிரிய பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் 23 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் பணத்தை கொள்ளையடித்துள்ளது.

குறித்த வெளிநாட்டவர் நிரந்தர விசாவில் இலங்கை வந்து தலங்கம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் பரிசோதகராக பணி செய்து வருகின்றார்.

இதற்கு மேலதிகமாக ஆடை மற்றும் நகை விற்பனை ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

32 வயதுடைய நைஜீரிய நாட்டவரிடமே பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.