சூசகமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொலிஸார்

Report Print Mubarak in பாதுகாப்பு

கஞ்சா பக்கற்றுகள் 36 யை எடுத்துச் சென்ற இரு இளைஞர்களை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் விஜயபுரபகுதியில் வைத்து இன்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 கஞ்சா பக்கற்றுகளும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். கைதான இவ்விருவரும் 20 மற்றும் 24 வயதுடைய நெலும்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு மிகச் சூசகமான முறையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சாக்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதன் போதே பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.