தயாசிறிக்கு மீண்டும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அழைப்பு விடுத்தது!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க தயாசிறி ஜெயசேகர எம்.பிக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.ரணசிங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரிப்பது என்றால் தெரிவுக்குழு முன்னிலையில் நான் வர முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது நாடாளுமன்றத் தெரிவுக்குழு. எனினும் இது தொடர்பான எக்கருத்தினையும் அவர் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.