கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட மர்மப்பொருள்! ஆபத்து குறித்து பொலிஸார் விசாரணை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அமோனியா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் இருந்து கிடைத்த 150 கிலோ கிராம் அமோனியா யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இரத்தினபுரி நகரத்தில் வாகனங்களை சோதனையிடும் போது அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் 150 கிலோ கிராம் நிறையுடைய இந்த அமோனியா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளர் பயணிகளுக்கு இடையில் இல்லாமையினாலும், பேருந்தின் மேலதிக பொருட்கள் வைக்கும் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டமையினாலும் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இது குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என சாரதி மற்றும் நடத்துனர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் இருந்து இந்த அமோனியா தொகை யாருக்கு? எதற்காக அனுப்பப்பட்டது? என்ற விடயங்களை அறிந்து கொண்டால் ஆபத்தான செயல்களுக்கான திட்டங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Latest Offers