அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவரை கைது செய்ய பகிரங்க பிடியாணை

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய, அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினரான பெண் ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்ற சந்தேக நபரும், அவரது சரீரப் பிணையாளர்களான மனைவி மற்றும் மனைவியின் உறவினரான பெண் ஆகியோரும் வெளிநாடு சென்றுள்ளனர்.

மீண்டும் நாட்டுக்கு திரும்பி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். இதனையடுத்தே சந்தேக நபர்களை கைது செய்ய நீதவான் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இது சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இலங்கை தூதரகத்திற்காக கட்டிடம் ஒன்றை கொள்வனவு செய்த போது, இலங்கை அரசுக்கு சொந்தமான ஒரு லட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட அவர், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதுடன் மீண்டும் நாடு திரும்பவில்லை. ஜாலிய விக்ரமசூரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers