விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வு செய்தவர்களுக்கு கிடைத்தது தோல்வி

Report Print Vannian in பாதுகாப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை தனியார் ஒருவரின் காணிக்குள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதிமுதல் பொலிசாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் இன்று அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி ஸ்கானர்களுடன் வருகை தந்த 15 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலிசார் கைது செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாக வைத்து குறித்த பகுதியில் அகழ்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், பொலீசார் ஆகியோர் முன்னிலையில் குறித்த பகுதி தோண்டப்பட்டது.

இறுதிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

Latest Offers